நக்சலைட்டாக நினைத்தேன்... - சொல்கிறார் ஏஆர் முருகதாஸ்

|

Ar Murugadass Planned Became Naxalite

திருச்சி: படிக்கும் காலத்தில் நக்சலைட்டாகிவிடலாமா என்று நினைத்தேன் என்கிறார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி விழாவில் அவர் பங்கேற்றுப் பேசுகையில், "இந்தக் கல்லூரியில்தான் நான் படித்தேன். 3 ஆண்டு படிப்பில் 30 ஆண்டு அனுபவங்களைப் பெற்றேன்.

இந்தக் கல்லூரியில் படிக்கும்போதுதான் தவறுகளைத் தட்டிக் கேட்கும் மனநிலை எனக்கு வந்தது. ஒரு கட்டத்தில் ஒரு நக்சலைட்டாக மாறிவிடலாமா என்றுகூட நான் நினைத்ததுண்டு. இல்லாவிட்டால் போராடும் அரசியல்வாதியாக மாறியிருப்பேன். அந்த அளவு மனசுக்குள் தீவிர போராளியாக இருந்தேன்.

2-வது உலகப் போரை நிறுத்தியது அலறியபடி ஆடையின்றி ஓடி வந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான். ஒரு புகைப்படம் ஒரு போரை நிறுத்தும் அளவுக்கு வலிமை படைத்தது என்றால், திரைப்பட துறையின் மூலம் சமுதாய பணி செய்யலாம் என்ற எண்ணத்தில் நான் திரைப்பட துறையில் நுழைந்தேன்.

எனது படங்களில் சமுதாய சீர்கேடுகளை சீர்திருத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற வைத்தது அதனால்தான்.

எனது ‘ரமணா' படத்தில் காட்டியவாறு மாணவர்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்லது செய்ய வேண்டும். சம்பளம் மட்டுமே லட்சியமல்ல," என்றார்.

 

Post a Comment