சுவிட்சர்லாந்தில் கைப்பை திருட்டு- கண்கலங்கி அழுத ஹன்சிகா!

|

Hansika Losts Her Bag At Switzerland   

நடிகை ஹன்சிகாவின் கைப்பையை சுவிட்சர்லாந்தில் ஒருவர் அபேஸ் செய்துவிட்டார். இதனால் கண்கலங்கி அழுதார் ஹன்சிகா.

எங்கேயும் காதல் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி, இப்போது சின்ன குஷ்பு என்ற பட்டப் பெயருடன் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார் ஹன்சிகா.

இப்போது தமிழில் முக்கிய படங்களில் இவர்தான் ஹீரோயின். சேட்டை படத்துக்காக ஆர்யாவுடன் டூயட் பாட சமீபத்தில் சுவிட்சர்லாந்து சென்றிருந்தார் ஹன்சிகா.

இதில் நடித்துக்கொண்டிருந்த போது ஹன்சிகாவின் கைப்பை திருட்டு போனது. யாரோ ஒரு மர்ம நபர் அந்த பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். பைக்குள் விலை உயர்ந்த ஐ-போன், ஐ-பாட், உயர் ரக மேக்கப் பொருட்கள் சுவிட்சர்லாந்து நாட்டு பிராங்க் (பணம்), அமெரிக்க டாலர் போன்றவற்றை வைத்திருந்தாராம் ஹன்சிகா.

இதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகி கண்கலங்கினார். இந்த திருட்டு குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

"திருட்டுப் போன பைக்குள் எனது தனிப்பட்ட படங்கள், சினிமா தொடர்பான ஸ்கிரிப்ட் போன்றவை இருந்தன. அவை தொலைந்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது," என்றார் ஹன்சிகா.

 

Post a Comment