இசைஅமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜசேகர் ஜி.பி. பிரகாஷை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர்கள் கதாநாயகர்களாக நடித்து வெற்றி பெற்று வருகின்றனர் அந்த வரிசையில் இசை அமைப்பாளர்கள் இப்போது ஹீரோவாக நடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த ‘நான்' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரவே இசை அமைப்பாளர்கள் பலருக்கும் ஹீரோவாக நடிக்க ஆசை வந்திருக்கிறது. அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோ அவதாரம் எடுக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது.
தற்போது திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் பணிகள் அதிகம் இருப்பதால் அதை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜசேகர் இயக்க உள்ளார். கதாநாயகி யார் என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
தன்னுடன் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகைதான் சரியான சாய்ஸ் என்று ஏற்கனவே பேட்டி ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். (சைந்தவி கவனிக்கவும்).
Post a Comment