சொந்தக் காசில் "சூனியம்" எடுத்த சமந்தா!

|

Samantha Special Pooja   

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்று முதுமொழி உள்ளது. ஆனால் காசு பணத்தை செலவிட்டு தனக்கு வைக்கப்பட்ட சூனியத்தை எடுத்துள்ளாராம் சமந்தா.

"பாணா காத்தாடி'யில் அறிமுகம் ஆகி "நான் ஈ" பட வெற்றி மூலம் மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆனவர் சமந்தா. ஆனால் திடீரென மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து அவர் விலக வேண்டிய நிலைக்கு ஆளானார்.

அதற்கு காரணம் சமந்தாவுக்கு வந்த தோல் நோய் அலர்ஜிதான்! ஆனால் தோல் நோய் அலர்ஜிக்கு கூட யாரோ சக நடிகை வைத்த பில்லி, சூனியம்தான் காரணம் என்று போட்டுக் கொடுத்திருக்கின்றனர் திரை உலக சகபாடிகள். அம்மணி ஆடிப் போய்விட்டாராம்!

மேலும், வினீத் என்ற கேரள மந்திரவாதி பற்றி சொல்லி அவரிடம் போய் பில்லி, சூனியம் எடுக்கலாம் என்று சொல்லியிருக்கின்றனர் நலம் விரும்பிகள்! இதை நம்பிய சமந்தாவும் சமர்த்தாக மந்திரவாதி வினீத்தை சந்தித்து சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறாராம்!

சூனியம் போயிருச்சா, போயிருச்சுன்னா எங்க போயிருச்சு, திரும்பக் கிரும்ப வருமா என்று தெரியவில்லை...!

 

Post a Comment