தாண்டவம் கதை என்னுடையது தான்

|

Thandavam is my story : Vijay

விக்ரம், அனுஷ்கா நடித்துள்ள 'தாண்டவம்' படம் சமீபத்தில் வெளிவந்தது. இதன் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி வழக்குத் தொடர்ந்துள்ளார். இந் நிலையில் 'தாண்டவம்'
இயக்குனர் விஜய், நிருபர்களிடம் கூறியதாவது: 'தாண்டவம்' படத்தின் கதை தன்னுடையது என்ற உதவி இயக்குனரின் சந்தேகம் நியாயமானது. காரணம், அவருடையதும் பார்வையற்றவர் பழிவாங்கும்

கதை. அவரது சந்தேகத்தை தீர்க்க, அவருக்கும், இயக்குனர்கள் சங்கத்துக்கும் படத்தை திரையிட்டுக் காட்டினேன். அதில் திருப்தி அடையாமல் நீதிமன்றம் சென்றுள்ளார். இரண்டு கதைக்கும் உள்ள வித்தியாசத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து படத்தை வெளியிட இருந்த தடையை நாங்கள் நீக்கினோம். தாண்டவம் படத்தின் கதை, என்னுடையதுதான் என்பதை எங்கும் நிரூபிப்பேன். அதற்காக கடைசி
வரை போராடுவேன். இதற்கிடையில் நான் பொன்னுசாமிக்கு பணம் கொடுத்து சமாதானமாகப் போய்விட்டதாகவும், அவர் இயக்கும் படத்தை நான் தயாரிக்கப் போவதாகவும் செய்தி வந்துள்ளது. அதில்
எந்த உண்மையும் இல்லை. அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறேன்.
 

Post a Comment