நடன ரசிகர்களைக் கவர்ந்த கொஞ்சும் சலங்கை!

|

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு பொதிகைக் தொலைக்காட்சியில் ‘கொஞ்சும் சலங்கை' என்ற பரதநாட்டிய நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

konjum salangai dance program on dd podhigai
Close
 
இந்த நடன நிகழ்ச்சியில் 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள் பங்குபெற்று பரதநாட்டியம், நாட்டுப்புற நடனங்களை ஆடி ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். பிரபல நடிகை வெண்ணிறஆடை நிர்மலா, இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துகிறார். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பிலும் நடனத்திலும் தனி முத்திரை பதித்தவர். நடனத்திற்காக கலைமாமணி விருதும் பெற்றவர். வெண்ணிற ஆடை நிர்மலாவும் இந்த நிகழ்ச்சியில் தன் முத்திரை நடனங்களையும் ஆடி நடன ரசிகர்களை மகிழ்விப்பது சிறப்பம்சம்.

இந்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க நடனங்களையும், கிராமப்புற நடனங்களையும் வளர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் சிறுவருக்கு "பொதிகை இளமயில்'' பட்டம் வழங்கப்படுகிறது. அதுபோலவே `சிறந்த கிராமப்புற நடனம்', `சிறந்த அபிநயம்', `சிறந்த உடைஅலங்காரம்', `புதுமை நடனம்' ஆகிய பிரிவுகளிலும் நடன கலைஞர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

ஞாயிறு தோறும் பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரை பொதிகை சேனலில் ஒளிபரப்பாகும் கொஞ்சும் சலங்கை நிகழ்ச்சியை நடிகை சுதா தொகுத்து வழங்குகிறார்.

 

Post a Comment