சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் விவேக் சித்ரா ஏ சுந்தரம் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78.
பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை, பொண்டாட்டி தேவை, வசந்த் இயக்கிய கேளடி கண்மணி உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் சுந்தம்.
சோ இயக்கிய மிஸ்டர் சம்பத் படம்தான் இவரது முதல் தயாரிப்பு. மீண்டும் சோவை இயக்குநராக வைத்து ‘யாருக்கும் வெட்கமில்லை’ என்ற படத்தைத் தயாரித்தார்.
‘புதிய பாதை’ படத்தின் மூலம் பார்த்திபனை நடிகர்-இயக்குநராக அறிமுகம் செய்தவர் சுந்தரம்தான். மீண்டும் அதே பார்த்திபனை இயக்குந் மற்றும் ஹீரோவாகப் போட்டு `பொண்டாட்டி தேவை’ படத்தைத் தயாரித்தார்.
வசந்த் இயக்கிய ‘கேளடி கண்மணி’ இவரது தயாரிப்பில் வந்த மிக முக்கியமான படம்.
கடந்த ஒரு வருடமாக விவேக் சித்ரா சுந்தரம் நுரையீரல் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
அவருடைய உடலுக்கு கே.பாலசந்தர், பார்த்திபன், வசந்த், சோ மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
நேற்று பகல் 1 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள சுடுகாட்டில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
மரணம் அடைந்த விவேக் சித்ரா சுந்தரத்துக்கு பானுமதி என்ற மனைவியும், பாலாஜி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர்.
Post a Comment