தயாரிப்பாளர்களை சமநிலையில் பார்க்கிறேன்

|

i am in balance : SAC

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் வி.எஸ்.சசிகலா பழனிவேல் வழங்கும் படம், 'விஜயநகரம்'. தன்வீர் இயக்குகிறார். சிவன், ஹாசினி, பானுசந்தர், ஆர்யன் உட்பட பலர் நடிக்கின்றனர். இசை: அருணகிரி, ஆர்.ராகவன். பாடல்கள்: விவேகா, மதுரகவி, மரண கானா விஜீ, ஐசக். இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. கே.பாக்யராஜ், பி.எல்.தேனப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது:

பெரிய பட்ஜெட் படம், சிறிய பட்ஜெட் படம் என்று நான் பார்ப்பதில்லை. 60 லட்சத்தில் படம் தயாரித்தாலும், 60 கோடியில் தயாரித்தாலும், தயாரிப்பாளர்கள் அனைவரையும் சம நிலையில்தான் பார்க்கிறேன். சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் சங்கமாக, தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதை புரிந்துகொள்ளாத சிலர், ஏதேதோ செய்கிறார்கள். விரைவில் அவர்களும் எங்களை புரிந்துகொண்டு இணைந்து பாடுபடுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். தன்வீர் நன்றி கூறினார்.
 

Post a Comment