அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கத்தில், தயாரித்து நடிக்கிறார் சித்தார்த். பாய்ஸ் படத்திற்கு தமிழில் அடுத்த ஹிட் படம் கொடுப்பதற்காக சித்தார்த் போராடிக்கொண்டி இருக்கிறார். சமீபத்தில் அவர் 'காதலில் சொதப்புவது எப்படி' படமும் சொத்தபியதால் கவனமாக கதை கேட்டு வருகிறார். இந்நிலையில் வசந்தபாலன் சொன்ன கதை பிடித்ததால், அந்த படத்தை தான் தயாரிக்கவும் சித்தார்த் ஒப்புக் கொண்டார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இதனையடுத்து ஹீரோயின் தேர்வு, டெக்னிஷியன் தேர்வு என சித்தார்த்தும், வசந்தபாலனும் வேலையை வேகமாக ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment