'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சின்மயி ஸ்ரீ பாதா. தொடர்ந்து, தமிழ் உட்பட 7 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக உள்ளார். டெலிவிஷன்களில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் நேற்று காலை தனது தாயார் பத்மாசினியுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு 2 புகார் மனுக்கள் கொடுத்தார். ஒரு மனுவில் சின்மயி கூறியிருப்பதாவது:
டுவிட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருக்கிறார். மற்றொரு புகாரில், "மும்பை சாய்பாபா டெலி பிலிமை சேர்ந்த இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கஜேந்திர சிங் என்பவர் எனக்கு ரூ.17 லட்சம் பணம் தரவேண்டும். பலமுறை கேட்டும் அவர் தராமல் காலம் கடத்திக்கொண்டு வருகிறார். எனவே ரூ.17 லட்சம் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இரண்டு புகார்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். புகார் அளித்து வெளியே வந்த சின்மயி நிருபர்களிடம் கூறியதாவது: பேஸ் புக் மற்றும் டுவிட்டர் இணைய தளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன். அதில், எனது புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இது எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று யாரும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களையும் படங்களையும் தொடர்ந்து வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.
குறிப்பாக பெண்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இந்த செயலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும் என்னை குறி வைத்து ஆபாச தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளேன். எனவே இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவ்வாறு சின்மயி கூறினார்.

Post a Comment