அன்று வில்லனுடன், இன்று காமெடியனுடன்... சோனியாவின் புதுப் பாதை

|

சென்னை: இதுவரை ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வந்த சோனியா அகர்வால், திருமண முறிவுக்குப் பின்னர் மீ்ண்டும் நடிக்க வந்த பிறகு முதல் முறையாக வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜுடன் ஜோடி போட்டார். இன்று சிரிப்பு நடிகர் விவேக்குடன் கை கோர்க்கிறார்.

sonia pair with comedian the first time   
Close
 
பாலக்காட்டு மாதவன் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. இதில் நாயகனாக நடிப்பவர் விவேக். இவர் நாயகனாக நடித்தால் படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சினை வரும் என்பது கோலிவுட்டின் நம்பிக்கை. அதையும் மீறி மீண்டும் அவரை நாயகனாக்குகின்றனர். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.

படத்தில் பிராமணப் பெண்ணாக வருகிறார் சோனியா. முன்பு தனுஷ், சிம்பு, ஸ்ரீகாந்த் என்று ஹீரோக்களுடன் நடித்து வந்தார் சோனியா. திருமணமான பின்னர் நடிப்பை விட்டார். அதன் பிறகு விவாகரத்து ஆன பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். வந்தவருக்கு ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரகாஷ்ராஜ்தான் கிடைத்தார். அவருடன் வானம் படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார்.

இந்த நிலையில்தான் தற்போது விவேக்குடன் ஜோடி போடுகிறார். ஹீரோக்கள், வில்லன் என்று நடித்த சோனியா இப்போது காமெடியன் ஒருவருடன் கை கோர்க்கிறார்.

பாலக்காட்டு மாதவன் பாக்யராஜுக்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்த பெயராகும். இந்தப் பெயரில் இப்போது உருவாகும் இப்படம் விவேக்குக்குப் பெயர் வாங்கித் தருமா, சோனியாவுக்குப் புது வாழ்க்கை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Post a Comment