முகமூடி படத்தையடுத்து கிரிக்கெட் என்ற படத்தை இயக்குவதோடு, அதில் ஹீரோவாகவும் நடிப்பதாக வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின்.
தனது அடுத்த படம் கிரிக்கெட் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் முகமூடி.
அடுத்து புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் இயக்குநர் மிஷ்கின். விறுவிறுப்பான ஆக்ஷனம் காதலும் கூடிய திரைக்கதையை இந்தப் படத்துக்காக உருவாக்கியுள்ளார்.
இதற்கிடையில்தான், கிரிக்கெட் என்ற படத்தை அவர் இயக்கி நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து இன்று இயக்குநர் மிஷ்கின் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், "எனது அடுத்த படம் கிரிக்கெட் இல்லை. அது வேறு படம். நான் அடுத்து இயக்கும் படத்தில் பிரபலமான ஹீரோ ஒருவரைத்தான் நடிக்க வைக்க பேச்சுகள் நடந்து வருகின்றன. படம் குறித்த மற்ற விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவிருக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment