கமல்ஹாஸன் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாகக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தயாரிப்பாளர் - இயக்குநர் முக்தா சீனிவாசன்.
இப்படம் உருவாகி 25 வருடம் ஆனதையடுத்து ஆங்கில பத்திரிகையொன்றில் கமல் ஒரு கட்டுரை எழுதினார்.
அதில், ‘முக்தா சீனிவாசனின் நிறுவனத்துக்காக நாயகன் படம் நடிக்க முடிவு செய்தேன். மணிரத்னம் இயக்கினார். மும்பையில் ஷூட்டிங் என்றதும் சற்று தயக்கம் காட்டி சீனிவாசன் சம்மதித்தார். பின்னர் சண்டை காட்சிகளை சர்வதேச தரத்துடன் எடுக்க இயக்குனர் முடிவு செய்தபோது அதற்கு சீனிவாசன் சம்மதிக்கவில்லை. பட்ஜெட்டை தாண்டி செலவு செய்ய முடியாது," என்று கூறிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முக்தா சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கமல் கூறியதில் உண்மையில்லை என்றும், அவர் தன் மேதைமையைக் காட்ட என்னை சிறுமைப்படுத்துகிறார் என்றும் கூறினார்.
மேலும் கமல் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாகக் கூறி கமலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.