ஐ பட ஷூட்டிங்கிற்காக விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் படக்குழுவுடன் சீனா செல்ல ரெடியாக இருந்தார் இயக்குனர் ஷங்கர், ஆனால் சீனாவில் ஷூட்டிங் செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. நண்பன் படத்தையடுத்து ஷங்கர் இயக்கி வரும் படம் ஐ. இதில் விக்ரம், எமி ஜாக்சன் ஜோடி. இப்படத்தில் பலவித கெட்அப்புகளில் விக்ரம் தோன்றுகிறார். சுரேஷ்கோபி, ராம்குமார், சந்தானம் உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபகாலமாக சென்னை மற்றும் சுற்றுப்புற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அடுத்த கட்ட ஷெட்யூல் சீனாவில் நடக்கயிருந்தது. இந்நிலையில் ஷூட்டிங் செய்ய சீனா அனுமதி வழங்காததை அடுத்து இயக்குனர் அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் ஷூட்டிங் செய்ய யோசித்து வருகிறார்.
Post a Comment