விஜய் டிவியில் ‘ஹோம் ஸ்வீட் ஹோம்' நிகழ்ச்சியில் டிடியுடன் கலகலப்பாக கலந்து கட்டிய தீபக் அதிலிருந்து விலகி விட்டார். சில நாட்கள் டிடி தனியாக ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்பொழுது டிடியுடன் அந்த நிகழ்ச்சியை வேறு யாரோ தொகுத்து வழங்குகின்றனர் நம்முடைய செய்தி அதைப்பற்றியல்ல. தீபக்கை பற்றிதான்.
சன் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்க உள்ள சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சியை தீபக் தொகுத்து வழங்க உள்ளார். இதைப்பற்றி அவரை டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
எல்லாமே பழசாயிருச்சு புதுசா எப்போ வாங்கப்போறோம்னு தெரியலையே என்று ஆதங்கப்படும் மருமகளுக்கு ஆறுதல் தரும் விதமாக பேசுகிறார் தீபக்.
கவலைப்படாதீங்க நாங்க உங்க வீடு தேடி வருகிறோம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தருபவர்களுக்கு புதிதாக பெரியதாக பரிசு தருகிறோம் என்கிறார். பழையதை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார் தீபக். பழசு எதுவா இருந்தாலும் மாற்றித் தருவீர்களா? என்று மருமகள் கேட்கவே அதற்கு மாமியார் அதிர்ச்சியடைவதுதான் சூப்பராக இருந்தது.
இது வித்தியசாமான கேம்ஷோ என்கிறார்கள். ஒளிபரப்பாகும் போதுதான் தெரியும். நிஜமாகவே இது புதுசா இல்லை பழைய பாட்டிலில் ஊற்றப்பட்ட புது ஒயினா என்று.
சன் டிவியில் இப்பொழுதுதான் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியலுக்கு சீக்கிரம் முடிவு கட்டிட்டு நல்ல நிகழ்ச்சிகளாக போடுங்கப்பா !
Post a Comment