விருந்தில் ஏக சத்தம் போட்டதால், சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமண வீட்டில் திடீரென போலீஸ் குவிந்தனர். இதனால் அக்கம் பக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சயீப் அலிகான் - கரீனா கபூர் இன்று மும்பையில் நடிக்கிறது. இந்தத் திருமணத்தையொட்டி தங்களின் நண்பர்கள் - உறவினர்களுக்கு மும்பை வீட்டில் விருந்தளிக்கப்பட்டது.
விருந்தின்போது இசை - பாடல்கள் இசைக்கப்பட்டன. அப்போது ஒலியின் அளவு மிக அதிகமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் தூங்க முடியாமல் தவித்தார்களாம்.
இதைத் தொடர்ந்து பாந்த்ரா போலீசில் ஓவர் சவுண்ட் குறித்து புகார் தெரிவித்தனர், பக்கத்து வீட்டுக்காரர்கள். இந்தப் புகாரின்பேரில், ஒரு ஜீப் நிறைய போலீசார் திருமண வீட்டுக்கு வந்திறங்கினர்.
இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. புகார் குறித்து விசாரணை நடத்திய பிறகு, சத்தத்தை குறைச்சிக்கங்க என்று கூறிவிட்டு போலீசார் கிளம்பினர். இதைத் தொடர்ந்து சிறிது நேரம் திருமண வீட்டில் அமைதி நிலவியது. ஆனால் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் ஓவர் சத்தத்தில் விடிய விடிய பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்ததாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
Post a Comment