பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் - படோடி சமஸ்தான வாரிசும் நடிகருமான சயீப் அலிகான் திருமணம் வரும் 17-ம் தேதி நடக்கவிருப்பதால், படோடி அரண்மனை புதுப்பிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் விஷயமாகிவிட்டது சயீப் - கரீனா காதல் மற்றும் திருமண விவகாரம்.
ஒன்றாகவே வசிக்கும் இருவருக்கும், ஒரு வழியாக வரும் அக்டோபர் 17-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அழைப்பிதழ்களும் தரப்பட்டு வருகின்றன.
இதில் சயீப்பின் அம்மா நடிகை ஷர்மிளா தாகூர் படுபிஸியாக உள்ளார்.
இந்த திருமணத்துக்காக படோடியில் உள்ள சயீப் அலிகானின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல கோடிகள் செலவழிக்கப்பட்டு, பலநூறு பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
படோடியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் வருகிற 25-ந் தேதி வரை இரு வீட்டு உறவினர்களுக்கும் தங்க அறைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன.
ஆரம்பத்தில் டெல்லியில் திருமணம், மும்பையில் வரவேற்பு என்று முடிவு செய்திருந்தனர். இப்போது தங்கள் பூர்வீக அரண்மனையிலேயே திருமணத்தை வைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
Post a Comment