மீண்டும் நடிக்க வந்த குட்டி ராதிகா

|

Kutty Radhika to act again

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார். 'இயற்கை', 'வர்ணஜாலம்', 'மீசை மாதவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் 'லக்கி' என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார். இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.

இதையடுத்து 'சுவீட்டி நானா ஜோடி' படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிப்புக்கு திரும்பி உள்ளார். விஜயலட்சுமி சிங் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் தொடங்கியது. ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மீண்டும் நடிக்க வந்ததுபற்றி ராதிகா கூறும்போது,'படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளு டன் படங்களில் நடிக்கிறேன். இப்படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது' என்றார்.
 

Post a Comment