சினிமாவில் பின்னணி பாட வாய்ப்பு தரும் 'ச ரி க ம சேலஞ்ச்'

|

Zee Tamil Sa Ri Ga Ma Pa Challenge

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ச ரி க ம ப சேலஞ்ச் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பாடும் பாடகர்களுக்கு தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாட வாய்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு விருந்தினங்கள் அறிவித்துள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய பாடகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் புதிய இசை நிகழ்ச்சி, `சரிகமப சாலஞ்ச் 2012.' ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

முதல் நிலையில் பின்னணி பாடகர்கள் ஹரிஷ் ராகவேந்திரா, பிரஷாந்தினி மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் மோகன் வைத்யா நடுவர்களாக இருந்து சிறந்த 14 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அடுத்த சுற்றுக்கு உன்னிமேனன் மற்றும் ஏ.ஆர். ரஹைனா நடுவர்களான இருந்து இந்த 14 போட்டியாளர்களில் இருந்து சிறந்த பாடகர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இசையமைப்பாளர் பரத்வாஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். போட்டியில் பங்கேற்று சிறப்பாக பாடும் பாடகர்களுக்கு இசையமைப்பாளர்கள் பாட வாய்ப்பு தருவதாக கூறியுள்ளனர்.

ச ரி க ம ப இசை நிகழ்ச்சி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

 

Post a Comment