மும்பை: சினிமாவில் ஹீரோக்களை மயக்கும் கவர்ச்சிப் பெண் வேடத்தில் நடிப்பது ரொம்பக் கஷ்டமான வேலை என்று கூறியுள்ளார் கவர்ச்சி நடிகை நேஹா தூபியா.
ரஷ் படத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் இணைந்து நடித்துள்ளார் நேஹா. ஏற்கனவே ஜூலி, ஏக் சாலிஸ் கி லாஸ்ட் லோக்கல், ராத் கயி பாத் கயி போன்ற படங்களில் துணிச்சலான கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் நேஹா.
ஆனால் இப்படிப்பட்ட கவர்ச்சி வேடங்களில் நடிப்பது ஈஸியான வேலை இல்லை என்று கூறுகிறார் நேஹா. இதுகுறித்து அவர் கூறுகையில், கவர்ச்சியை அள்ளித் தந்து ஹீரோவை மயக்கும் வேடத்தில் நடிப்பதை பலரும் எளிதான வேலை என்று சொல்கிறார்கள். உண்மையில் அதுதான் கஷ்டமானது.
நமது பாடி லாங்குவேஜ் முதல் வசன உச்சரிப்பு, கண் அசைவு, உதட்டசைவு என அனைத்திலுமே கவர்ச்சி ததும்பி வழிய வேண்டும். அதுபோன்ற உணர்ச்சிகரமான அசைவுகளைக் கொண்டு வந்து நடிப்பது சாமானியப்பட்டதில்லை என்று கூறுகிறார் நேஹா.
ஆமாமா, ரொம்பக் கஷ்டம்தான்...!
Post a Comment