முதல் முறையாக பிரகாஷ் ராஜ் நடனமாடினார் 'துள்ளிவிளையாடு' படத்திற்காக!

|

Prakash Raj Dances First Time Thulli Vilayadu   

துள்ளிவிளையாடு என்ற படத்துக்காக முதல் முறையாக ஒரு முழு பாடலுக்கும் நடனமாடினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

துள்ளி விளையாடு படத்தை வின்சென்ட் செல்வா இயக்க ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், வெண்ணிலா கபாடிகுழு புகழ் சூரி ஆகியோர் நடிக்க உருவாகி வருகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பிரகாஷ் ராஜ் ஒரு பாட்டு முழுக்க மும்பை மாடல் அங்கீதாவுடன் செம ஆட்டம் ஆடியுள்ளார்.

முழுக்க முழுக்க இந்த பாடல் ராஜஸ்தானில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் படமாக்கப்பட்டது.

சண்டிக் குதிர
சண்டிக் குதிர
வண்டிக்குள்ள சிக்காத
ஒன்டிக்குதிர...

என்ற மிக வேகமான பாடலுக்கு பிரகாஷ்ராஜ் ஆடியுள்ளார். அதுவும் வித விதமான, கலர்ஃபுல்லான ஆடைகளுடன்.

ஒரு பிரச்சினையில் தனக்கு சாதகமான தகவல் வந்ததால் மகிழ்ச்சியடையும் பிரகாஷ் ராஜ் அதை தன் குழுவுடன் ஆடிக் களிப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதற்கு முன் எந்தப் படத்திலும் பிரகாஷ்ராஜ் இப்படி முழு பாடலுக்கும் நடனமாடியதில்லையாம்.

 

Post a Comment