ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒத்திகை பார்த்ததால் இருமடங்கு செலவானதுடன் ஷூட்டிங் நாட்கள் அதிகரித்தது. 'விருமாண்டி' படத்தில் கமலிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கே.சி.ரவிதேவன். இவர் சி.எஸ்.முகேசனுடன் இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளத் துப்பாக்கி'. இதுபற்றி ரவிதேவன் கூறியதாவது: படிக்கும் மாணவர்களிடம் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அதைவைத்து அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லும் கதை. விக்கி, விஜித், பிரபாகரன், தமிழ்செல்வன், குட்டி ஆனந்த் ஹீரோக்கள். கேரளாவை சேர்ந்த ஷாவந்திகா ஹீரோயினாக அறிமுகமாகிறார். மற்றும் குருபகவான், சம்பத்ராம், சிந்தியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்காதது ஏன் என்கிறார்கள். தயாரிப்பு நுணுக்கங்களை தெரிந்துகொள்வதற்காக இயக்கும்பொறுப்பு புது இயக்குனர் லோகியாஸிடம் தரப்பட்டது. புதுமுகங்கள் நடிப்பதால் லொகேஷனிலேயே ஒத்திகை பார்த்து படப்பிடிப்பு நடத்தினோம். 60 நாட்கள் திட்டமிட்டிருந்த ஷூட்டிங் இதனால் 128 நாட்கள் ஆனது. இரு மடங்கு செலவானாலும் காட்சிகள் எதிர்பார்த்தபடி வந்திருக்கிறது. மேலும் இன்டர் கட் என்ற முறையில் ஒரு ரிலீல் பிலிமுக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக காட்சிகள் படமாக்கப்பட்டது. ஒளிப்பதிவு ஏ.வி.வசந்த். இசை எஸ்.கே.பாலசந்திரன். இவ்வாறு ரவிதேவன் கூறினார்.
Post a Comment