லொள்ளு தாதா பாடல்கள் வெளியீடு

|

Lollu Dadha Song Release

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூரலிகான் தயாரித்து நடிக்கும் படம், 'லொள்ளு தாதா பராக் பராக்'. அவரே இசை அமைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார். விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு, முன்னாள் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர், தயாரிப்பாளர்கள் கோவை தம்பி, படத்தின் நாயகி உமாஸ்ரீ, நாயகன் பிரவீன், இயக்குனர் ஜே.ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாடல் சி.டியை 15 ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் மன்சூரலிகான்.
 

Post a Comment