ஹீரோ ஆகிறார் ஜி.வி.பிரகாஷ்

|

G V becomes an actor

நடிக்க மாட்டேன் என மறுத்து வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திடீரென ஹீரோவாக நடிக்க சம்மதித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க¤றார். Ôஎங்கேயும் எப்போதும்' படத்தை அதுபோல் தயாரித்தார். அடுத்து, தனது உதவியாளர் ராஜசேகர் இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இசை சம்பந்தமான கதை இது. இதில் ஹீரோவாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ÔÔமுருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். இப்போது தமிழ், இந்தி படங்களில் பிசியாக இசையமைத்து வருகிறேன். அதே நேரம் படத்தில் நடிப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தி வருகிறேன். இது பற்றி உடனே எதையும் சொல்ல முடியாது" என்றார். இதற்கு முன் ஜி.வி.பிரகாஷை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயன்றார்கள். Ôநடிப்பு ஆசை இல்லை. இசையில் மட்டுமே கவனம் செலுத்துவேன்' என கூறி வந்தார் பிரகாஷ். இசையமைப்பாளர், நடிகராக ஜெயிக்க முடியுமா என அவருக்கு சந்தேகம் இருந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் 'நான்' வெளியாகி ஹிட்டானது. விமர்சகர்களும் இப்படத்தை பாராட்டினர். இதையடுத்து பிரகாஷுக்கும் நடிப்பில் சாதிக்கலாம் என தைரியம் வந்திருக்கிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 

Post a Comment