புதுப்பொலிவுடன் லக்கா கிக்கா: மாடர்னாக மாறிய ரோஜா

|


Zee Tamil Luckka Kickka
ஜீ தொலைக்காட்சியின் 'லக்கா கிக்கா' கேம் ஷோ தற்போது புதுப்பொலிவை எட்டியுள்ளது. இதுநாள் வரை நிறைய நகையும், கலக்கல் புடவையுமாக வந்த தொகுப்பாளர் ரோஜா மாடர்ன் டிரஸ்க்கு மாறியிருக்கிறார்.

திங்கட்கிழமை இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கிங்காங், சினேகா, தவக்களை, பரிமளா ஆகிய திரைப்பட நடிகர்கள் பங்கேற்றனர். இதுநாள் வரை திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த இந்த நடிகர், நடிகைகள் ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்தினர்

ரோஜா கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அசத்தலாக கூறி அனைவரையும் வியக்கவைத்தனர் இந்த நடிகர்கள். பெண் பங்கேற்பாளர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற இறுதி சுற்றில் விளையாடிய தவக்களையும், கிங்காங்கும் கடும் போட்டியை சந்தித்தனர்.

இறுதியில் லக்கா, கிக்கா நிகழ்ச்சியில் 18 ஆயிரம் ரூபாய் பரிசினை வெற்றி ஆட்டநாயகன் பட்டத்தை தட்டிச்சென்றார் கிங்காங். தவக்களை 9ஆயிரத்து 500 ரூபாய் பரிசினை வென்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
 

Post a Comment