உண்மை என்ற படத்தில் நடித்த போது அந்தப் பட இயக்குநர் ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்து, பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
ஆனால் இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர். திருமணம் முறிந்துவிட்டது.
இதுகுறித்து மீடியாக்காரர்களை தானே அழைத்து விளக்கம் சொல்லி வருகிறார்கள் சுஜிபாலாவும் ரவிக்குமாரும். நேற்று முழுக்க ரவிக்குமார் முறை போலிருக்கிறது. இன்று சுஜிபாலா தன் பக்க விளக்கத்தை கூறினார்.
அவர் கூறுகையில், "நானும் ரவிக்குமாரும் காதலித்தோம், நிச்சயமும் செய்து கொண்டோம். ஆனால் சின்னச்சின்ன விஷயங்களில் கூட எங்களால் ஒத்துப் போக முடியவில்லை. இப்போதே இப்படி என்றால், எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ என்ற யோசனையும் பயமும்தான் இந்த திருமணம் நிற்கக் காரணம்.
ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை வேறு, தொழில் வேறு. இதே ரவிக்குமார் இனி படம் எடுத்தாலும் நடிப்பேன். இந்தப் படத்தில் கூட சில காட்சிகள் பாக்கி உள்ளன. நடித்துக் கொடுக்கத்தான் போகிறேன்.
இனி திருமணம் பற்றி யோசிக்கக் கூட விரும்பவில்லை," என்றார்.
Post a Comment