மலையாளத்தில் ஹிட்டான 'பியூட்டிஃபுல்' படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் மோகன். இதுபற்றி அவர் கூறியதாவது: 'அன்புள்ள காதலுக்கு' படத்தை சிவிக் சினிமா நிறுவனம் சார்பில் தயாரித்தேன். பிறகு மலையாளத்தில் 'தலப்பாவு' படத்தை தயாரித்தேன். இப்போது ஜெயசூர்யா, அனூப் மேனன், மேக்னாராஜ் நடித்த 'பியூட்டிஃபுல்' படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னட ரீமேக்கின் உரிமையை வாங்கியுள்ளேன். இதை நானே தயாரிக்கிறேன். மலையாளத்தில் இயக்கிய வி.கே.பிரசாத் தமிழிலும் இயக்குகிறார். இது தவிர, செந்தில் என்பவர் இயக்கும் படத்தில், ஆன்ட்டி ஹீரோவாக நடிக்கிறேன். மேலும், சாம் ஜே.சைதன்யா இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன்.
Post a Comment