'ஒரே ஒரு ரசிகன் எனக்காக வந்தாலும்...!' - அதான் ராஜா

|

Ilayaraja Firm On His Stand Conduct

கனடாவில் என்னைக் காண à®'ரே à®'ரு ரசிகன் வந்தாலும் அவனுக்காக 5 மணி நேரம் கூட இசை நிகழ்ச்சி நடத்துவேன், என்று அறிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

வரும் நவம்பர் 3-ம் தேதி கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா.

ஆனால் ஈழத் தமிழர்களின் துக்க மாதம் நவம்பர். அந்த மாதத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என புதிதாகப் புறப்பட்டிருக்கும் சில திடீர் உணர்வாளர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இதனால் இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு ஆதரவாக பெரும்பான்மை மக்களும், எதிராக à®'ரு சிறு குழுவும் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலை. ஆனாலும் டிக்கெட் வாங்கியவர்களைப் போகவிடாமல் தடுக்க சிலர் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சி கட்டாயம் நடக்கும் என்றும், தன் நிலையில் மாற்றமில்லை என்பதையும் உணர்த்தும் வகையில் à®'ரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

அதில், "கடல் கடந்து கனடா நாட்டுக்கு உங்களைக் காண வரும் எனக்காக à®'ரே à®'ரு ரசிகன் அரங்கத்தில் இருந்தாலும், அந்த ரசிகன் எழுந்து போகும் வரை, அவன் ஐந்து மணி நேரம் காத்திருந்தால், அவனுக்காக நான் அந்த ஐந்து மணிநேரமும் இசை நிகழ்ச்சி நடத்துவேன்," என்று கூறியுள்ளார்.

 

Post a Comment