போலீசில் "நான் ஈ" சுதீப் புகார்

|

sudeep complaints his twitter

தனது பெயரில் போலி டுவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதால் போலீசில் புகார் அளித்துள்ளார் கன்னட பட ஹீரோ சுதீப். Ôநான் ஈ' படத¢தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் சுதீப். இவர் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து தனது கருத்துகளை எழுதி வருகிறார். இந்நிலையில் இவரது பெயரில் இன்னொரு டுவிட்டர் பக்கம் இயங்கி வந்துள்ளது. இது பற்றி சுதீப்புக்கு அவரது நண்பர்கள் தகவல் கூறினர். இதையடுத்து அந்த பக்கத்தை பார்த்தபோது, சுதீப் அதிர்ந்து போயிருக்கிறார். அதில் தான் கூறியதாக சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

தனது அடுத்தகட்ட பணிகள் தொடர்பாகவும் அதில் சில குறிப்புகள் இருந்தன. எல்லாமே பொய்யான தகவல்களாக அதில் இடம்பெற்றிருந்ததால் சுதீப் கொதித்துப்போனாராம். மேலும் தனது பெயரில் இதுபோல் மோசடி செய்வது யார் என்பதை தெரியப்படுத்துமாறு தனது ரசிகர்களுக்கு சுதீப் உத்தரவிட்டாராம். ஒரு மாதமாகியும் அது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறார் சுதீப்.

இதுபற்றி அவர் கூறும்போது, ÔÔநான் ஈ படத்துக்கு பிறகு எல்லோருக்கும் தெரிந்த முகமாக நான் மாறிவிட்டேன். இதை பயன்படுத்தி எனது பெயரில் யாரோ டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளனர். இது எனக்கு பெரும் ஷாக் ஆக இருந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துவிட்டேன். ரசிகர்கள் யாரும் போலி டுவிட்டர் பக்கத்தை நம்ப வேண்டாம்" என்றார்.
 

Post a Comment