பாலிவுட்டில் நடிக்க பொறுமை தேவை: விமலா ராமன்

|

Patience is required to act in Bollywood: Vimala Raman

பாலிவுட்டில் நடிப்பதற்கு பொறுமை வேண்டும் என்றார் விமலா ராமன்.

'பொய்', 'ராமன் தேடிய சீதை' படங்களில் நடித்திருப்பவர் விமலா ராமன். அவர் கூறியதாவது:
தமிழில் 2 படங்களில் நடித்தேன். நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். எதுவும் வரவில்லை. இதனால் பிறமொழியில் கவனம் செலுத்தி நடித்து வந்தேன். பாலிவுட்டில் 2 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததும் ஏற்றுக்கொண்டேன். 'அப்ரா டஃபாரி', 'மும்பை மிரர்' ஆகிய படங்களில் நடிக்கிறேன். 'டேம் 999' ஆங்கில படம் உள்பட இதுவரை 6 மொழிகளில் நடித்திருக்கிறேன்.

பாலிவுட் அனுபவம் பற்றி கேட்கிறார்கள். தென்னிந்திய படங்களில் வேலை செய்வதை காட்டிலும் பாலிவுட் படங்களில் பணியாற்றுவது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. தென்னிந்திய படங்களில் சிறிய பட்ஜெட் படங்கள்தான் அதிகம் தயாராகிறது. அதன் ஷூட்டிங் வேகமாக நடக்கும். ஆனால் பாலிவுட்டில் பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகின்றன. ஷூட்டிங்கும் மெதுவாகவே நடக்கிறது. இதற்கு பொறுமை அவசியம். பாலிவுட்டில் பணியாற்றுவதன் மூலம் பெரிய அளவில் பேர் கிடைக்க வாய்ப்புள்ளது. 'அப்ரா டஃபாரி' படத்தில் கோவிந்தா ஜோடியாகவும், 'மும்பை மிரர்' படத்தில் துப்பறியும் நிருபராகவும் நடிக்கிறேன். இவ்வாறு விமலா ராமன் கூறினார்.
 

Post a Comment