சசிகுமாருக்கு அதிர்ஷ்டம் எல்லா ரேகையிலும் ஓடுகிறது போல, படம் இயக்க வந்தவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வருகிறது. இயக்கியது இரு படங்கள், நடித்ததன் எண்ணிக்கை ஒன்பதைத் தொடப் போகிறது. சுந்தரபாண்டியன் சூப்பராக ஓடுகிறது. இதனால் மீண்டும் நடிக்கப் போகிறார். இந்தமுறையும் சொந்த தயாரிப்பு. முத்தையா என்கிற அறிமுக இயக்குனர். லட்சுமி மேனனுடன் காதலித்து போதவில்லை போலிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு அவரையே ஹீரோயின் ஆக்கியிருக்கிறாராம்.
Post a Comment