நடுக்கடலில் இலங்கைக் கடற்படையால் சுட்டு சல்லடையாக்கப்பட்டப் படகில் எல்லோரும் இறந்து கிடக்க, வட இலங்கையைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் மட்டும் கடல் அநாதையாகிறான். தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவன் அச்சிறுவனை தன் பிள்ளையாக வளர்க்கிறார் ஒரு தாய்.
இந்தக் காட்சி இடம்பெறும் படம்: நீர்ப்பறவை, இயக்கம்: சீனு ராமசாமி, பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து, இசை: என். ஆர். ரகுநந்தன்.
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
நீ வந்து நிறையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும்
அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை
கரைதான் தந்தை
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
நிலங்கள் நீளும் வரையில்
உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே
யாதும் இங்கே ஊரே ஆகுமே
புலங்கள் மாறிய போதும்
புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்
உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்
மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
அகதி என்று யாரும் இல்லை
கால தேசம் எல்லாம் மாறலாம்
காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும்
அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை
கரைதான் தந்தை
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை...
இந்தப் பாடல் வரிகள் இன்று உலகமெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் மனதைத் தொட்ட பாடலாக மாறியிருக்கிறது.
Post a Comment