படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சிகள் அடங்கிய சி.டி.கள், சென்னையில் உள்ள இரண்டு வங்கிகளின் லாக்கர்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மலையாள இயக்குனர் பிளஸ்சி 'களிமண்' என்ற பெயரில் படம் இயக்குகிறார். கர்ப்பிணி பெண்ணுக்கும் வயிற்றில் உள்ள கருவுக்கும் இடையே உள்ள பந்தம்தான் படத்தின் கரு. ஸ்வேதா மேனன் ஹீரோயின். கர்ப்பமாக இருந்த அவரது பிரசவத்தை படமாக்க முடிவு செய்திருந்தார் பிளஸ்சி. கடந்த மாதம் 25-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்வேதா பெண்குழந்தையை பெற்றெடுத்தார். இதை மூன்று கேமரா உதவியுடன் பிளஸ்சி படம் பிடித்தார். பிரசவத்தின் போது ஸ்ரீவல்சன், பிளஸ்சி மற்றும் 3 கேமராமேன்கள் மட்டுமே இருந்தனர்.
படப்பிடிப்பு முடிந்ததும் எடிட்டிங் செய்வதற்காக பிளஸ்சி, சி.டி.களுடன் சென்னை சென்றார். அங்குள்ள எடிட்டிங் ஸ்டுடியோ ஒன்றில் ரகசியமாக எடிட்டிங் நடந்தது. பின்னர் ஷூட் செய்யப்பட்ட காட்சிகள் இரண்டு டிஸ்குகளில் பதிவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டன. பின்னர் சென்னையில் உள்ள இரண்டு வங்கிகளின் லாக்கரில் பலத்த பாதுகாப்புடன் அந்த சி.டி.கள் பத்திரமாக வைக்கப்பட்டன. படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. பிறகு இந்த சி.டி.கள் எடுக்கப்பட்டு படத்தில் இணைக்கப்பட இருக்கிறது.

Post a Comment