தெலுங்கு ஹீரோ நானிக்கும் அவரது காதலி அஞ்சனாவுக்கும் நேற்று விசாகப்பட்டினத்தில் திருமணம் நடந்தது.
நானியும் அஞ்சனாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். ஆனால் இந்தக் காதல் குறித்து மீடியாவில் வந்த அத்தனை செய்திகளையும் நானி மறுத்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் திடீரென நிச்சயதார்த்தம் நடந்தது. நவம்பர் 24 ம் தேதி திருமணம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், திடீரென விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
தெலுங்கு திரையுலகினருக்காக வேறொரு நாளில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என்று நானி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Post a Comment