முடிவுக்கு வந்தது துப்பாக்கி பிரச்னை

|

wait is over for thuppaki's fan

'துப்பாக்கி' படப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் படம், 'துப்பாக்கி'. இந்த படத் தலைப்புக்கு 'கள்ளத் துப்பாக்கி' பட தயாரிப்பாளர் ரவிதேவன் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை 2வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட், 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இத்தடையை நீக்கக் கோரி 'துப்பாக்கி' படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். 'வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்துவருவதால் அங்குதான் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்று ஐகோர்ட் கூறியது.

இதையடுத்து வழக்கு விசாரணை நேற்று அங்கு நடக்க இருந்தது. இந்நிலையில் வழக்கை வாபஸ் பெறுவதாக ரவிதேவன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், 'கள்ளத்துப்பாக்கி' படத் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இத்தலைப்பு விட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி ரவிதேவனிடம் கேட்டபோது, 'முருகதாஸ் சிறந்த டெக்னீஷியன். ஒரு படைப்பாளியாக அவரது பிரச்னையை புரிந்துகொண்டேன். இதையடுத்து பிரச்னை முடிக்கப்பட்டது' என்றார்.
 

Post a Comment