ரஜினியுடன் சேர்ந்து நடிக்காததற்கு சம்பள பிரச்னையே காரணம் என்று கமல்ஹாசன் பதில் அளித்தார்.
'16 வயதினிலே', 'மூன்று முடிச்சு', 'அவள் அப்படித்தான்', 'அவர்கள்', 'ஆடு புலி ஆட்டம்', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'தாயில்லாமல் நானில்லை', 'நினைத்தாலே இனிக்கும்', அலாவுதீனும் அற்புத விளக்கும்', 'தில்லுமுல்லு' உள்பட 15-க்கும் அதிகமான படங்களில் கமல், ரஜினி இணைந்து நடித்தனர். குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்காமல் பிரிந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முயன்றும் முடியவில்லை.
இந்நிலையில் ஆங்கில சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் கமல் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறும்போது, ''ஆரம்ப கால கட்டங்களில் எனக்கும் ரஜினிக்கும் இடையே ஈகோ இருந்தது. இதை உணர்ந்த எங்களது குரு பாலசந்தர், இருவருக்கும் அறிவுரை கூறினார். அதை ஏற்றுக்கொண்டோம். எங்களுக்குள் இருந்த ஈகோ மறைந்து நட்பு ஏற்பட்டது. ஆனாலும் எங்களுக்குள் சத்தமே இல்லாமல் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். இனி இருவரும் படங்களில் இணைந்து நடிப்பதில்லை என்பதே அது. அதற்கு காரணம் ஒன்றாக நடிக்கும்போது எங்களது சம்பளம் இரண்டாக பிரிக்கப்படுவதுதான். இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கியதும் எங்களது சம்பளம் இரு மடங்கானது மட்டுமல்லாமல், இருவரும் அந்த சம்பளத்துக்கு உரிய தகுதி உடையவர்கள்தான் என்பதை நிரூபிக்க முடிந்தது. இது நடைமுறைக்கு உகந்த சரியான முடிவாக இருந்தது. இருவருமே வியாபார நோக்குடனே இருந்த நேரம் அது'' என்றார்.

Post a Comment