இசையமைப்பாளர் ஆனார் யு.கே.முரளி

|

Murali became the composer

ஸ்ரீசாய் பிலிம்ஸ் சார்பில் எஸ்.வி.உதயகுமார் ஒளிப்பதிவு செய்து தயாரிக்கும் படம், 'நான்காம் தமிழன்'. சந்துரு, மோனா ஜோடியாக நடிக்கின்றனர். பாடல்கள், பிறைசூடன். ஓங்காரமூர்த்தி இயக்குகிறார். 20 வருடங்களாக மேடைக்கச்சேரி நடத்தி வரும் கின்னஸ் சாதனையாளர் 'உதயராகம்' யு.கே.முரளி, இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அவரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியும், படத்தின் பாடல் வெளியீடும் நேற்று நடந்தது. 6 பாடல்களை தனித்தனியே முக்தா சீனிவாசன், அபிராமி ராமநாதன், பி.பி.ஸ்ரீனிவாஸ், வசந்த், கதிர், தேவா வெளியிட்டனர். தயாரிப்பாளர் எஸ்.ஏக்நாத், 'ஆரோகணம்' ஜெய்குஹானி, யு.கே.முரளி, புளோரல் பெரேரா, சந்துரு, விஜய்சந்தர், மோனா, அபிநயா பெற்றனர். நிகழ்ச்சிகளை பாத்திமா பாபு தொகுத்து வழங்கினார்.

கமலுக்கு வக்கீல் நோட்டீஸ்

விழாவில் யு.கே.முரளியை வாழ்த்திய முக்தா சீனிவாசன், கூறும்போது,  'ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு கமலஹாசன் அளித்துள்ள பேட்டியில், 'நாயகன்' படம் பற்றி சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அது இப்போது தேவையில்லாதது. சினிமாவில் சண்டை சச்சரவு இல்லாமல், எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். கமலஹாசன் சொல்லியிருக்கும் விஷயங்களைப் படித்து வருத்தப்பட்டேன். கமல் மீது வழக்கு தொடுத்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன்' என்றார்.
 

Post a Comment