அரவான் தோல்வியிலிருந்து மெல்ல மீண்டு கொண்டிருக்கும் வசந்த பாலன் அடுத்து சித்தார்த்துடன் கைகோர்க்கிறார்.
இருவரும் இணையும் படத்துக்கு காவியத் தலைவன் என்று பெயர் சூட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'அரவான்' படம் வசந்தபாலன் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. கடும் விமர்சனங்களுக்குள்ளானது.
இந்த நிலையில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் வசந்த பாலன். காதலில் சொதப்புவது எப்படி என்ற பட்த்தை தயாரித்த சசிகாந்த் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
சித்தார்த்துக்கு ஏற்கனவே தெலுங்கில் நல்ல பிஸினஸ் இருப்பதால் இந்தப் படத்தை தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறார் சசிகாந்த்.
படத்துக்கு 'காவியதலைவன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹீரோயின் உள்ளிட்ட விஷயங்களை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
Post a Comment