அமிதாப்பச்சன் நடத்தி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், கத்ரீனா கைப் ஆகியோர் பங்கேற்று தங்களின் அடுத்த படத்தைப் பற்றி முக்கிய அம்சங்களை ரசிகர்களுக்கு எடுத்துக்கூறினர். நிகழ்ச்சியில் ஷாருக்கானும், கத்ரீனாகைப்பும் பாடி ஆடியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பிரபல நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ, கேம் ஷோவில் பங்கேற்பது இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி கூடுவதோடு தங்களின் படத்தையும் புரமோட் செய்யலாம். இதனால் டூஇன்ஒன் லாபம் கிடைக்கும்.
சமீபத்தில் மறைந்த பாலிவுட் தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் கடைசிப் படமான ‘ஜப் தக் ஹை ஜான்' திரைப்படத்தில் ஷாருக், கத்ரீனா இணைந்து நடித்துள்ளனர். இது விரைவில் வெளியாக உள்ளது. இதனை புரமோட் செய்யும் வகையில் குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கங்னம் ஸ்டைல் பாடல் யூடிபில் பிரபலம். கோடிக்கணக்கில் ஹிட் அடித்துள்ள இந்த பாடலை கேட்பவர்களையும், நடனத்தை பார்ப்பவர்களையும் குத்தாட்டம் போடவைக்கும். அவர்கள் இருவரும் கங்னம் ஸ்டைல் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அவர்களுடன் அமிதாப்பச்சனும் இணைந்து நடமாடி அசத்தினார். மூவரும் கருப்பு நிற உடை அணிந்து ஆட்டம் போட்டது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த எபிசோட் சோனி டிவியில் நவம்பர் 4ம் தேதி ஒளிபரப்பாகும்
குரோர்பதி நிகழ்ச்சியில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு கரன்ஜோகர், ஸ்ரீதேவி ஆகியோர் பங்கேற்று தங்களின் படங்களை புரமோட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment