இப்படி ஒரு படம் நடித்ததில்லை : விஜய்

|

Thuppakki is my best : vijay

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம், 'துப்பாக்கி', விஜய், காஜல் அகர்வால் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விஜய் வெளியிட மூத்த மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் பெற்றார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய், விவேகா, மதன் கார்க்கி, நடிகர் சத்யன், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் விஜய் கூறியதாவது:

நான் நடித்த படங்களிலேயே இது வித்தியாசமானது. இதுவரை இப்படி ஒரு படம் நடித்ததில்லை. வழக்கமான கிளைமாக்சாக இல்லாமல் இதில் புதுமையான ஒரு விஷயம் வைக்கப்பட்டுள்ளது. அது பேசப்படுவதாக இருக்கும். எனது படங்களில் பாய்ந்து பாய்ந்து சண்டை போடுவேன். இதில் யதார்த்தமான சண்டை காட்சிகள் உள்ளது. எனது படங்களில் மேக்கிங்கிற்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. இதில் மேக்கிங்கில் கவனமாக இருந்தேன். முருகதாஸ் மாதிரி பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிப்பது அதுவாக அமைந்ததுதான். முருகதாஸ் என்னை இந்தி படத்தில் நடிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அது அவர் ஆசை. ஆனால் எனக்கு இந்திப் படம் மட்டுமல்ல; வேறு மொழியிலும் நடிக்கும் எண்ணம் இல்லை. எனக்கு தமிழ், தமிழ்தான். அது போதும்.
 

Post a Comment