அதர்வா நடிப்பு சூப்பர் : பாலா

|

Superb performance show by atharva : Bala

தேசிய விருது வென்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படம் 'பரதேசி'. அதர்வா ஹீரோவாக நடித்திருக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில், தனது 3வது படத்திலேயே அருமையான நடிப்பை அதர்வா வெளிப்படுத்தியுள்ளதாக இயக்குனர் பாலா கூறியுள்ளார். மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வாவின் நடிப்பு குறித்து இயக்குனர் பாலாவிடம் கேட்டதற்கு, ' தனது 3வது படத்திலேயே அருமையான நடிப்பை அதர்வா வெளிப்படுத்தியுள்ளார், ஒரு 100 படத்தில் நடித்த அனுபவத்தை அதர்வா நடிப்பில் பார்த்தேன்' என்று இருவரிகளில் கூறி சென்றுவிட்டார்.

பட ஷூட்டிங் முடியும் வரை பட ஸ்டில்ஸை வெளியடாத பாலா, தற்போது ஸ்டில்களை வெளியிட்டுயிருக்கிறார். அதில் அதர்வா, சாக்கு பையை சட்டையாக போட்டுக் கொண்டு, ஒரு விதமான முடி கட்டுடன் இருக்கிறார். முப்பொழுதும் உன் கற்பனை படத்தில் மிகவும் அழகாக இருந்த அதர்வா இது என்ற அளவுக்கு இருக்கிறது அவரது கெட்டப். கெட்டப் எப்படியிருந்தாலும் பாலா படத்தில் நடித்தால் நடிப்பு சூப்பராக வந்து விடும் என்பது தான் உண்மை.. இந்த படம் நிச்சியம் தமிழ் சினிமாவிற்கு நல்ல பெயரை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
 

Post a Comment