கடந்த பிப்ரவரி 22ம் தேதி இரவு நடிகர் சைப் அலிகான், அவருடைய காதலியும் வருங்கால மனைவியுமான நடிகை கரீனா கபூர் மற்றும் சிலர் நண்பர்கள் தாஜ் ஓட்டலில் உள்ள வசாபி ரெஸ்டாரண் டில் சாப்பிட்டனர். அவர்களுக்கு பக்கத்து டேபிளில் வெளிநாடு வாழ் இந்தியரான இக்பால் சர்மா தனது குடும்பத்துடன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, சைப் அலிகானும் நண்பர்களும் சத்தம் போட்டு பேசினர். இது இக்பால் சர்மாவுக்கு இடையூறாக இருந்ததால், மெதுவாக பேசும்படி சைப் அலிகானிடம் கேட்டு கொண் டார். இது சைப் அலிகானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இக்பால் சர்மாவுடன் வாக்குவாதம் செய்த அவர், திடீரென அவரை தாக்கினார். இது பற்றி கொலாபா போலீசில் இக்பால் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அன்றிரவே சைப் அலிகானை போலீசார் கைது செய்தனர். மறுநாள் காலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நடந்து 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சைப் அலிகானுக்கு எதிராக நீதிமன்றத்தில் நேற்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சைப் அலிகான், அவருடைய நண்பர்களிடம் வாக்குமூலம் பெற தாமதமானதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக போலீசார் கூறினர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், வழக்கு விசாரணையில் சைப் அலிகான் கட்டாயம் ஆஜராக வேண்டும்.

Post a Comment