இந்திப் படம் இயக்குகிறார் ராஜமவுலி

|

bollywood debut direction for raja mouli

இந்தியில் நேரடி படம் ஒன்றை இயக்க இருப்பதாக இயக்குனர் ராஜமவுலி கூறினார். ராஜமவுலி இயக்கி உள்ள 'நான் ஈ' படம் இந்தியில் 'மாக்கி' என்ற பெயரில் டப் ஆகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் ராஜமவுலி கூறியதாவது: நான் இயக்கிய 'மகதீரா' படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இயக்குனர் அனுராக் காஷ்யப் அதன் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார். அதில் யார் நடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஹிருத்திக் ரோஷன் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 'நீங்களே ஏன் ரீமேக் செய்யக்கூடாது?' என்கிறார்கள்.
மகதீரா படத்தை இரண்டு வருடங்கள் செலவழித்து எடுத்திருக்கிறேன். மீண்டும் அதே இரண்டு வருடத்தை ஒரே கதைக்கு ஏன் செலவழிக்க வேண்டும். அதற்கு வேறு கதையை நான் இயக்கலாமே. அதுமட்டுமில்லாமல் ரீமேக் எனக்குப் பிடிக்காத விஷயம். விரைவில் நேரடி இந்தி படம் ஒன்றை இயக்க இருக்கிறேன். இப்போது டப் ஆக இருக்கிற 'மாக்கி' தமிழ், தெலுங்கில் ஹிட்டாகி இருக்கிறது. இந்தியில் ஹிட்டாகும் என நம்புகிறேன். இவ்வாறு ராஜமவுலி கூறினார்.
 

Post a Comment