'பவர்கட்' படமெடுத்த பஞ்சாப் நடிகர் ஜஸ்பால் பட்டி மரணம்

|

Jaspal Bhatti Dies Road Crash

ஜலந்தர்: பஞ்சாபி காமெடி நடிகர் ஜஸ்பால் பட்டி சாலை விபத்தில் இன்று காலை இறந்தார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து பதிண்டாவுக்கு இன்று அதிகாலை காரில் ஜஸ்பால் பட்டி சென்று கொண்டிருந்தார். 3 மணியளவில் அவர் சென்ற கார் சாலையோர மரத்தில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நகோடர் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் அவரது மகன் ஜஸ்ராஜ், நடிகை சுரிலி கௌதம் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனது புதிய படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஜஸ்பால் பட்டி காரில்சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

காரை ஜஸ்ராஜ்தான் ஓட்டியுள்ளார். ஜஸ்பால் பட்டியின் இறுதிச் சடங்குகள்இன்று மாலை நடைபெறும் என்று தெரிகிறது. அவருக்கு மனைவி சவிதா, மகன் ஜஸ்ராஜ், மகள் உள்ளனர். அவர் தயாரித்து இயக்கிய பவர் கட் படம் விரைவில் வெளியாக இருந்தது.

ஏராளமான ஹிந்திப் படங்கள், பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார் ஜஸ்பால். அதுமட்டுமல்லாமல் டி.வி.களில் ஏராளமான காமெடி ஷோக்களையும், மேடைகளில் காமெடி நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தியுள்ளார்.

 

Post a Comment