என் பெயர் குமாரசாமி படத்தைப் பார்த்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் ராதாரவி பாராட்டு தெரிவித்தனர்.
பானுப்ரியா நடிக்க, ரதன் சந்திரசேகர் இயக்கியிருக்கும் படம் 'என் பெயர் குமாரசாமி'.
அண்மையில் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த கலைப்புலி தாணுவும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இயக்குநரை மனம் திறந்து பாராட்டியுள்ளனர். "பாலாவுக்கு ஒரு சேதுவைப் போல உங்களுக்கு என் பெயர் குமாரசாமி திருப்புமுனை படமாக அமையும்" என்று இயக்குநரின் தோளில் தட்டிப் பாராட்டியிருக்கிறார் தாணு.
"கிளைமாக்ஸ் காட்சியில் தமிழ்நாட்டையே கலங்க வைத்து விடுவீர்கள்" என்று இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.
இது குறித்துக் கேட்டபோது, " நிச்சயம் பேசப்படுகிற படமாகவும், பெரும் வெற்றிப் படமாகவும் "என் பெயர் குமாரசாமி' அமையும் என்பதில் எனக்கு நூறு சதவீத நம்பிக்கை உள்ளது" என்று கூறும் இயக்குனர் ரதன் சந்திரசேகர், தான் பெறப் போகும் வெற்றியில் எடிட்டர் வி.டி.விஜயனுக்கும், இசையமைப்பாளர் வீ.தஷிக்கும் பெரிய பங்கிருக்கும் என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்.
இந்தப் படத்தில் புதுமுகம் ராம், மேற்கு வங்க நடிகை தேஸ்தா இராவதி, யுவா, மோனிகா பிலிப் ஆகிய இரண்டு ஜோடியுடன் பானுப்பிரியா, ராதாரவி, பப்லு பிருத்விராஜ், யோகி தேவராஜ், நாராயணன் தீபக் ஆகியோரும் நடித்துள்ளனர். மலையாளத்தில் காமெடியில் கலக்கும் பைஷூ, இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.....
நடிகர-இயக்குநர் ஆர் பார்த்திபன் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
Post a Comment