சன்தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் செல்லமே புதிய திருப்பங்களை நோக்கி நகர்கிறது. கதையில் சுவாரஸ்யமான பகுதிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட உள்ளதான தொடர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாந்தியின் குழந்தையை மரபணு சோதனை மூலம் உறுதி செய்து அவளிடமே குழந்தையை ஒப்படைக்கிறாள் செல்லம்மா. இப்போது தனது மகளான கண்ணப்பாவை தேடி செல்லம்மா பயணம் ஆரம்பம் ஆகிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவின் இயற்கை வனப்பு மிகுந்த பகுதிகளில் படமானது. இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலை நோக்கி பயணிக்கிறது.
கண்ணம்மா எங்கே இருக்கிறாள் என்பதை செல்லம்மாவின் கணவன் வடமலை கண்டுபிடித்து விடுகிறான், அதை செல்லம்மாவிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறான். வடமலை கண்ணம்பாவை தேடி கொடைக்கானல் வருகிறான். முத்தழகியும் கண்ணம்பா இருப்பதை கண்டுபிடிக்கும் நேரத்தில் ஒரு கொலை பழிக்கு ஆளாகிறாள்.
செல்லம்மாவை எதிரியாக நினைக்கும் சினேகாவும் சிவரஞ்சனியும் வடமலையை தன் பக்கம் ஈர்த்து அவனிடம் பேரம் பேசுகிறார்கள். வேறு வழியின்றி வடமலை அவர்களுடைய கட்டளைக்கு உட்பட்டு தன் மகளை அவர்களிடம் விற்று விட்டு லட்சக்கணக்கான பணத்துடன் சென்னை திரும்புகிறான்.
இதே நேரம் வடமலையின் இரண்டாம் மனைவி காயத்ரியை செல்லம்மா காப்பாற்றி அவள் வயிற்றில் வளரும் கருவையும் காப்பாற்றுகிறாள். செல்லம்மாவை எதிரியாக நினைத்து வடமலை குழந்தையை விற்ற பணத்தைகொண்டு அவளின் எதிர் வீட்டிலேயே பெரிய தொழில் ஆரம்பிக்கிறான். வடமலைக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று செல்லம்மா தெரிந்து கொள்ள தவிக்கிறாள். காணாமல் போன தன் மகள் கண்ணம்மாவை தேடி பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள் செல்லம்மா.
இதில் செல்லம்மா சந்திக்கும் போராட்டங்களை இனி வரும் விறுவிறுப்பான காட்சியில் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒ.என். ரத்னம் இயக்கியுள்ள இந்த தொடரில் ராதிகா சரத்குமார், சாட்சி சிவா, மாளவிகா, தேவி பிரியா, விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்திருக்கின்றனர் திரைக்கதை குரு. சம்பத்குமார் எழுதியுள்ளார்.
Post a Comment