ஆஷா போஸ்லே மகள் தற்கொலை

|

Asha Bhosle's daughter, Varsha commits sucide
பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லேயின் மகள் வர்ஷா போஸ்லே இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லே. இந்தி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை. சினிமா பாடல்கள் மட்டுமின்றி கஜல், பஜன், பாப் பாடல்களும் பாடியுள்ளார். உலகம் முழுவதும் சுற்றி இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இவரது மகள் வர்ஷா போஸ்லே (56) மும்பையில் தங்கியிருந்தார். எழுத்தாளரான இவர் பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளும் எழுதி வந்தார். அம்மா போல, வர்ஷாவும் இந்தி, மராத்தி படங்களில் பாடி வந்தார்.

இந்நிலையில், இவர் திடீரென இன்று வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். வர்ஷா தற்கொலை செய்ததை உறுதிசெய்தனர். மராத்தி விருது நிகழ்ச்சிக்காக ஆஷா போஸ்லே தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். மகள் தற்கொலை குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றவர். வர்ஷா போஸ்லே தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Post a Comment