காஜல்தான் என்னோட ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட் - விஜய்

|

Vijay Hot Spicy Girl Friend Kajal Agarwal    | காஜல்  

சென்னை: பெயரிலேயே இனிப்பை வைத்திருக்கும் காஜல் அகர்வால்தான் என்னோட ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட், என்றார் நடிகர் விஜய்.

விஜய் கதாநாயகனாக நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இவ்வாறு விஜய் கூறினார்.

விஜய் பேசுகையில், "இந்தப் படம் அமைஞ்சதுக்காக எங்க அப்பாவுக்கு நான் நன்றி சொல்லணும். இந்த படத்துக்காக டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் தாணு ஆகியோரை ஏற்பாடு செய்து கொடுத்தவர், எங்க அப்பாதான்.

ஏ.ஆர்.முருகதாசை, `குஷி' படத்தில் இருந்து எனக்கு தெரியும். அவர் டைரக்டு செய்த அத்தனை படங்களையும் பார்த்து இருக்கிறேன். அற்புதமாக கதை சொல்லக்கூடியவர். என்னை கவர்ந்த டைரக்டர். இந்த மாதிரி படமும், கதையும் இதுவரை என்னை `டச்' பண்ணலை. ஏ.ஆர்.முருகதாஸ் எனக்கு மிக சவுகரியமாக இருந்தார்.

காஜல் அகர்வால், பெயரிலேயே இனிப்பை வைத்திருக்கிறார். அகர்வால் ஸ்வீட். எனக்கு பிடித்த 'கேர்ள் ப்ரெண்ட்,' காஜல் அகர்வால். படத்துலதான்," என்றார்.

 

Post a Comment