மலையாளப் பட உலகில் சூப்பர் ஸ்டார்களையே பதற அடித்த ஷகீலா இப்போது காமெடி நடிகையாக கலக்கி வருகிறார். அரசியல் பிரமுகருடன் திருமணம், சினிமாவுக்கு முழுக்கு என மீடியாக்களில் செய்தி அடிப்பட்ட நிலையிலும் தனக்கு கல்யாணம் என்றால் அலர்ஜி, தனியாக இருப்பதுதான் ஜாலி என்று பேட்டி தருகிறார்.
சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என்று நினைத்திருந்த நிலையில் சம்பாதித்த பணத்தை எல்லாம் உறவினர்களே ஏமாற்றி விட்டதாக நொந்து போய் கூறும் ஷகீலா. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட நான் நடித்தால்தான் காசு என்ற நிலை வந்த காரணத்தால்தான் மறுபடியும் நடிக்க வந்ததாக கூறியுள்ளார்.
இப்போது ‘உண்மை' என்ற படத்தில் நடித்து வரும் ஷகீலா ஷூட்டிங்கில் கூடிய கூட்டத்தைப் பார்த்து அசந்து விட்டாராம். இதனால் அரசியல் ஆசை வந்து தவிக்கும் ஷகீலா கூடிய விரையில் ஏதாவது கட்சியில் சேர்ந்தாலும் ரசிகர்கள் ஆச்சரியப்படவேண்டாம்.
ஷகீலாவை வரவேற்க எந்தக் கட்சிக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ....
Post a Comment