48 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் ஹிட்டடித்த நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற அட்டகாசமான பாடல் ரீமிக்ஸ் ஆகிறது. அந்தப் பாடலை பாடிய அதே கே.ஜே.ஜேசுதாஸ்தான் இப்பாடலையும் பாடியுள்ளாராம்.
மூடர் கூடம் என்ற படத்திற்காக இந்தப் பாடலை ஜேசுதாக் பாடியுள்ளார். அன்று பாடியதைப் போலவே இன்றும் இப்பாடலில் ஜீவனை வெளிப்படுத்தி அசத்தி விட்டாராம் ஜேசுதாஸ்.
1964ம் ஆண்டு வெளியான படம் பொம்மை. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்தான் இந்த நீயும் பொம்மை நானும் பொம்மை. பாடல். அந்தக் காலத்தில் இந்த அசாதாரணமான பாடல் பெரும் ஹிட்டானது.
அமானுஷ்யப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பாடல் ஜேசுதாஸுக்கும் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. மேலும் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்தப் பாடல்தான் தமிழ் திரையுலகில் ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப் பாடல் என்பதாகும். எனவே இந்தப் பாடல் ஜேசுதாஸின் வாழ்க்கைப் பயணத்திலும் முக்கிய இடம் பிடித்த ஒன்று.
இப்பாடலை மீண்டும் அதன் பொலிவு மாறாமல் மூடர் கூடம் படத்தில் வைத்துள்ளனர். மீண்டும் இப்பாடலைப் பாடியபோது ஜேசுதாஸ் உணர்ச்சிவசப்பட்டுப் பாடினாராம்.
Post a Comment